இன்றைய முக்கிய செய்திகள் சில!

597

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.

லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்த விவகாரம் – மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் வீட்டில் உபி போலீசார் சம்மனை ஒட்டியுள்ளனர், அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை நாளை விசாரணைக்கு ஆஜராக அழைப்பு.

கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி : குத்தகை காலம் முடிந்தும் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக ரூ.9.5 கோடியை கோயில் நிர்வாகத்திற்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வரும் 10ம் தேதி 5வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 30,000 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது , பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சகம்.

முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவரை இடை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்.

உபி லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரயில்வே வளாகத்திலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம்  உத்தரவு

போதைப்பொருள் வழக்கு  : நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் – 20 பேர் பலி ஏராளமானோர் படுகாயம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு.

இந்தியா-இலங்கை ராணுவம் இடையே 8வது ‘மித்ர சக்தி’ கூட்டு பயிற்சி இலங்கையின் அம்பாரா பகுதியில் தொடங்கியது : அக்டோபர் 4 ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு பயிற்சி  15ம் தேதி வரை  நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here