


புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள இரத்த வங்கியில் ராஜாவயலை சேர்ந்த மதுபாலா என்பவர் ஆய்வக நுட்புனராக ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ரத்த வங்கி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர்.
இதனிடையே அந்த இரத்த வங்கியில் ஆய்வாக நுட்புணராக பணியாற்றி வரும் மதுபாலா என்பவரும் தமது கடமையை கடந்து அவரது உறவினர்கள் நண்பர்கள் என 20 நபர்களை தனிப்பட்ட முறையில் அழைத்துவந்ததோடு அவர்களோடு சேர்ந்து தாமும் இரத்த தானம் செய்தார். இந்த நிகழ்வு காண்போரை வியக்க வைத்த நிலையில் இதுகுறித்து மதுபாலா விடம் கேட்டபோது: தனது தந்தையின் தந்தையான பாலன் மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுனராக பணியாற்றியதோடு பல்வேறு சமூக செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அவர் மறைந்துவிட்ட நிலையில் அவரின் நினைவாகவும் அவர் செய்து வந்த சமூக செயல்பாடுகளை தொடரும் விதமாகவும் தனது பங்கிற்காக தனது உறவினர்கள் நண்பர்கள் என 20 நபர்களை அழைத்து வந்து இன்று இரத்ததானம் செய்துள்ளதாகவும் இதன் மூலம் 20 நோயாளிகள் பயன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் குருதி தானம் செய்ய வேண்டியது அவசியம் என்றும் தான் ரத்த வங்கியில் பணியாற்றினாலும் இன்றைய நிலையில் இரத்தத்தின் தேவை அதிகமாக உள்ளதாகவும் அதனாலேயே தாமும் இரத்ததானம் செய்ததோடு தமது நண்பர்களையும் ரத்ததானம் செய்ய வைத்ததாகவும் இனிவரும் நாட்களிலும் மறைந்த தமது தாத்தாவின் நினைவாக நண்பர்களை ஒன்றிணைத்து தொடர்ந்து ரத்ததானம் வழங்க உள்ளதாகவும் மதுபாலா தெரிவித்தார்.
இன்று தேசிய தன்னார்வ இரத்ததான விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு இரத்த வங்கிகளுக்கு ஆய்வா ஆய்வு நுட்புணர் ஒருவர் இரத்ததானம் செய்ததோடு அவரது நண்பர்கள் இருவரையும் இரத்த தானம் செய்ய வைத்த நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.