இதுதான் களநிலவரம்… பொதுப்போக்குவரத்து..

941

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு இயக்கப்பட்டு வருகின்றன.. இடையில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சில நாட்கள் போக்குவரத்து நடந்தது தனிக்கதை..

இப்போது என்ன நிலவரம்?

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு பேருந்துகளில் கூட்டம் காணமுடிகிறது.. தினமும் வேலை மற்றும் கட்டாய தேவை உள்ளவர்கள் மட்டுமே பயணிக்கின்றனர்..

கடுமையான பொருளாதார சூழலால் வெளியூர் பயணங்களை பலரும் முடிந்தவரை தவிர்த்து விடுகின்றனர்..

சென்னை மாநகரில் மாநகரப் பேருந்துகளில் ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே கூட்டம்.. மற்ற வழித்தடங்கள் அனைத்தும் காலியாகவே ஓடுகின்றன..

சீசன் டிக்கெட் மூலம் குறைந்த கட்டணத்தில் சேவை அளித்துவந்த புறநகர் ரயில்கள் எதுவுமே இதுவரை இயக்கப்படாத நிலையிலும் அப்படிப்பட்ட சூழல் ..

தினமும் 3 கோடி ரூபாய் வசூல் பார்த்துவந்த மாநகர போக்குவரத்துக் கழகம் இப்போது ஒரு கோடி ரூபாய் வசூலுக்கு தள்ளாட்டம் காணுகிறது..
ஒரு பேருந்து பழைய தினசரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கை எடுத்தாலே பெரிய விஷயம் என செய்தி போடுகிறது டைம்ஸ் ஆப் இந்தியா..

நம்மிடம் ஒரு கண்டக்டர் சொன்ன தகவல்.. “ஒருமுறை போய் வந்ததில் வெறும் 120 ரூபாய் மட்டுமே கலெக்ஷன் என்பதால் வண்டியை டெப்போவில் விட்டு விடச் சொல்லி விட்டார்கள்..”

டீசலுக்கு கூட வசூல் தேறாது என்றாலும் பொது மக்களின் நலன் கருதி அரசு இந்த இழப்பை சந்தித்துதான் ஆகவேண்டும்..

  • ஏழுமலை வெங்கடேசன் மூத்த பத்திரிகையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here