இசை நிகழ்ச்சி நடத்த கட்டாய வசூலில் இறங்கிய தனியார் கல்லூரி…!
கதறும் மாணவிகளின் பெற்றோர்….

624

திருச்சியின் மைய பகுதியான மெயின்கார்டுகேட் அருகே நூற்றாண்டு விழாவை நெருங்கி கொண்டு இருக்கும் புகழ்பெற்ற தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி தான் ஹோலி கிராஸ் எனும் புனித சிலுவை கல்லூரி

எத்தனையோ மகளிர்களை அரசு அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக, மற்றும் தொழில் முனைவோர்களாக உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு

தற்போது இந்த கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இசை நிகழ்ச்சிக்கு மாணவிகளிடம் கட்டாய வசூலில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது

இந்த குற்றசாட்டு குறித்து மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரித்தபோது

ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த கிராமம் ஒன்றை தத்தெடுத்து ஸ்மார்ட் கிராமமாக மாற்ற போவதாக அறிவித்துள்ளனர்

அதற்கு நிதி திரட்ட எல்.சி.ஏ எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் மூலம் வரும் 18 ந் தேதியன்று திருச்சி ஏர்போர்ட் அருகேயுள்ள மொராய் சிட்டியில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது

இந்த இசை நிகழ்ச்சிக்கு ஹோலி கிராஸ் கல்லூரி நிர்வாகம் தங்களிடம் கல்வி பயின்று வரும் சுமார் 6000 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் ஒன்றுக்கு தலா ரூ.2000 முதல் 3000 வரை கறராக வசூலித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்

எல்.சி.ஏ எண்டர்டெயின்மென் நிறுவனம் கல்லூரி மாணவிகளிடம் இசை நிகழ்ச்சி டிக்கெட் விற்பனை செய்வதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல் ஆணையரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளனரா? என்ற கேள்வியும் சிலர் முன் வைக்கின்றனர்

கிறிஸ்தவ பிஷப் மற்றும் பேராயர்களிடம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் ஆயிரக்கனக்கான கோடிகள் குவிந்திருக்கும் நிலையில் அதன் மூலம் நலிவடைந்த கிராமத்தை முன்னேற்றும் முயற்சியில் தாராளமாக ஈடுபடலாம்

அதை விடுத்து அப்பாவி ஏழை எளிய மாணவிகளிடம் இசை நிகழ்ச்சிக்கு கட்டாய வசூலில் ஈடுபடுவது வழிப்பறி செய்யும் செயலுக்கு ஒப்பாகவே தோன்றுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

பள்ளிகல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலே அத்து மீறலில் இறங்கியுள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்தின் அடாவடி செயலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது

இதனிடையே இசை நிகழ்ச்சிக்காக மாணவிகளிடம் டிக்கெட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாக கூறி புனித சிலுவை கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here