அரசை செலுத்த வேண்டிய வரியை ஏமாற்ற நினைத்த டாக்டர்! துணை போன சார் பதிவாளர்!
படுகாயம் அடைந்த கூலித் தொழிலாளிகள்..

375

புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வந்த பழைய இரண்டு மாடி கட்டிடம் இடிக்கும் போது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒரு பெண் உள்ளிட்ட 7 கட்டிட தொழிலாளர்களை மீட்ட தீயணைப்பு துறை, மூன்று பேர் படுகாயங்களுடன் மொத்தம் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி, கட்டிடத்தை வாங்கிய நபர் காலி மனை இடம் என்று பதிந்து வேகமாக கட்டிடத்தை இடித்து காலி மனையாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மழை நேரத்திலும் தொடர்ந்து எந்தவித அனுமதியும் இன்றி கட்டிட இடிக்கும் பணியை மேற்கொண்டதாலே இந்த கட்டிட விபத்து நேர்ந்துள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடை இயங்கி வந்த இரண்டு மாடி கட்டிடம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டிடம். இந்நிலையில் இந்த கட்டிடத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் செந்தில் குமார் என்பவர் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டிடத்தை இடிப்பதற்காக வாண்டான்கோட்டையை சேர்ந்த அரங்குளவன் என்ற பழைய கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் மூலம் செந்தில்குமார் கடந்த 10 தினங்களுக்கு மேலாக இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த கட்டிடம் இடிக்கும் பணியில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம புறங்களில் இருந்து 20 கட்டிட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தொடர்ந்து கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வழக்கம்போல் கட்டிடம் இடிக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள்..

இதனையடுத்து அருகே இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒரு பெண் உள்ளிட்ட ஏழு கட்டிட தொழிலாளர்களை காயங்களுடன் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 7 பேர் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக் கூடிய சூழ்நிலையில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் இந்த கட்டிடத்தை வாங்கிய நபர் காலிமனை இடம் என்று பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் மேலும் சம்பவ இடத்தை யாரேனும் பார்வையிட வந்தால் காலிமனையிடம் என்று காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் புதுக்கோட்டை நகரில் பெய்து வரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் மழைகாலத்தில் கட்டிட பணியாளர்களைக் கொண்டு பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தாகவும் மேலும் கட்டிடத்தை மேலிருந்து இடிக்காமல் கீழ்ப்பகுதியிலிருந்து எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் இடித்ததாலும் இந்த விபத்து நேர்ந்ததாகவும் மேலும் கட்டிடத்தை இடிக்க எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கட்டிட இடிக்கும் பணி நடைபெற்றதாகவும் மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

இதற்கிடையே பல்வேறு தொடர் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் விதிமுறையை மீறி பழமை வாய்ந்த கட்டிடத்தை நகராட்சி அனுமதி பெறாமல் இடித்ததாக கட்டிடத்தின் உரிமையாளர் செந்தில்குமார்,ஒப்பந்தக்காரர் அரங்குளவன் ஆகியோர் மீது நகராட்சி ஆய்வாளர் ஜெய்சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here