அமெரிக்காவில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் பெயரில்
கிரிக்கெட் தொடர் போட்டிகள் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 31 வரை நடந்தது.
அமெரிக்காவின் முதல் மாநிலமான டெலவர் மாகாணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின்
பிறந்தநாள் சிறப்பு கிரிக்கெட் தொடரில் , 6 அணிகள், 80 வீரர்கள் மற்றும் மொத்தம் 16 போட்டிகள் நடைபெற்றன.
6 அணி வீரர்களும் 6 வெவ்வேறு வண்ண சட்டைகள் அணிந்து விளையாடி தொடரை சிறப்பித்தனர்.
அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக
புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் திரு. முருகு பாண்டியன், நியூயார்க்-நியூஜெர்சி ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் திரு. பாலகனகராம், டெலவர் பெருநிலத்தமிழ்ச் சங்க செயலாளர் திரு. வெங்கட் ஆகியோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும் மற்றும் சிறந்த வீரர்களுக்கும் விருதுகள் வழங்கி
சிறப்பித்தனர்.
இத்தொடரை ராஜ்குமார் அவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்.
சூப்பர் ஸ்டார் அவர்களின் பெயரில் நடந்த இந்த தொடர் அமெரிக்கா முழுவதிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.